
அங்கன்வாடியில் பயின்று வந்த தங்களது 4 வயது மகனுக்கு சூடு வைத்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்த சம்பவம் தருமபுரியில் நிகழ்ந்துள்ளது.
தருமபுரி மாவட்டம் ராமியம்பட்டியை சேர்ந்த சங்கர்-கீர்த்திகா தம்பதியினரின் 4 வயது மகன் அந்த பகுதியில் உள்ள அங்கன்வாடி ஒன்றில் பயின்று வந்துள்ளான். மாலை வீடு திரும்பிய சிறுவனின் காலில் சூடு வைக்கப்பட்டதற்கான காயம் இருப்பதை கண்டு பெற்றோர்அதிர்த்துள்ளனர். இதுகுறித்து அங்கன்வாடிக்கு சென்று கேட்டபோது அமைப்பாளர் அம்சா என்பவரும், சமையலர் சந்தியா என்பவரும் மிகவும் ஏளனமாக பதில்கூறியதாகக் கூறப்படுகிறது. எனவே அங்கன்வாடி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தம்பதிகள் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)