காதலி பேசாததால் தற்கொலை செய்து கொண்ட காதலன்!

boyfriend who lost their life because his girlfriend did not speak

சாத்தூர் - படந்தாலைச் சேர்ந்த பால மகாராஜா (வயது 23), சாத்தூர் அசோசியேசன் பெட்ரோல் பல்க் லாரியில் க்ளீனராக வேலை பார்த்து வந்தார். இவர் ஒரு பெண்ணைக் காதலித்துள்ளார். கடந்த 2 நாட்களாக அந்தக் காதலிபால மகாராஜாவிடம் பேசவில்லை. மது அருந்துவதும் புகையிலை போடுவதும் பால மகாராஜாவின் பழக்கமாக இருந்துள்ளது. காதலி தன்னுடன் பேசாததால் ‘எனக்கு வாழவே பிடிக்கவில்லை’ என வீட்டில்புலம்பியிருக்கிறார்.

இந்நிலையில், வீட்டின் முன்பிருந்த தகர செட்மேற்கூரையில் தூக்கிட்டுத்தற்கொலை செய்துகொண்டார். சாத்தூர் அரசுமருத்துவமனைக்கு பால மகாராஜாவின் உடல் கொண்டு செல்லப்பட்டு பிரேதப் பரிசோதனை நடந்தது. ‘என் மகன் காதல் தோல்வியால்தான் தற்கொலை செய்துகொண்டான்.அவனுடைய இறப்பில் சந்தேகம் எதுவுமில்லை.’ என்று தந்தை கணேசன் சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் அளித்தபுகாரில் தெரிவித்ததைத் தொடர்ந்து வழக்குப் பதிவாகியுள்ளது.

boyfriend lovers police
இதையும் படியுங்கள்
Subscribe