boyfriend who incident his girlfriend's children

தர்மபுரி மாவட்டம் ஏர்க்கொல்லப்பட்டியை சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன்(30) - பிரியா(24) தம்பதியினர். இவர்களுக்கு ஆறு வயதில் ஒரு மகனும் மூன்று வயதில் ஒரு மகனும் என இரு பிள்ளைகள் உள்ளன.

தற்போது,பாலகிருஷ்ணன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் முண்டாசு புறவடையில் உள்ள மாமனார் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலைபிரியாவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவரான வெங்கடேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.

இந்த நிலையில் வெங்கடேஷ் உடனான திருமணத்தை மீறிய உறவை பிரியா திடீரென நிறுத்தி உள்ளார். இதனால் ஆத்திரம்வெங்கடேஷ் பிரியாவை பழிவாங்கும் வேண்டும் என்று கோவத்தில் இருந்து உள்ளார். இந்த நிலையில் தான் வெளியே விளையாட கொண்டிருந்த பாலகிருஷ்ணன் - பிரியா தம்பதியின் இரண்டு மகன்களையும் வெங்கடேஷ் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

Advertisment

பின்பு குழந்தைகள் இருவரது கண்களிலும் மிளகாய்ப் பொடியைத்தூவிய வெங்கடேஷ் கல்லால் அவர்கள் தலையில் அடித்து கொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து குழந்தைகளின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் வெங்கடேஷைக் கைது செய்த அதியமான்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதையடுத்துகாவல் நிலையத்திற்கு பின்புறமுள்ள ரயில்வே தண்டவாளத்திற்கு தப்பிச் சென்ற வெங்கடேஷ் அங்குள்ள மின்கம்பியை கடித்துத்தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். திருமணத்தை மீறிய உறவால் இரு குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.