Advertisment

சென்னையில் வெறிச்செயல்; காதலியைக் கொன்று ஸ்டேட்டஸ் வைத்த காதலன் 

boyfriend who incident his girlfriend and made a whatsapp status

காதலியைக் கொன்று தனது வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸாக வைத்த காதலனின் செயல் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கேரளா மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த பவுசியா(20) என்ற நர்சிங் மாணவி சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு நர்சிங் படித்து வந்துள்ளார். அதே கொல்லம் பகுதியைச் சேர்ந்த ஆஷிக்(20) என்பவரும், பவுசியாவும் கடந்த 5 வருடங்களாகக் காதலித்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில், மாணவி பவுசியா கடந்த மூன்று நாட்களாகக் கல்லூரிக்குச் செல்லாமல் காதலன் ஆஷிக்குடன் வெளியே சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து இருவரும் நேற்று குரோம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் அறை எடுத்துத்தங்கியுள்ளனர். அப்போது இருவருக்கும்ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஹோட்டல் அறையில் சண்டை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அந்த சண்டை முற்றவேஆத்திரமடைந்த காதலன் ஆஷிக், பவுசியாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர்அதனை ஆஷிக் தனது வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸாகவும் வைத்துள்ளார். இந்த நிலையில் ஆஷிக்கின் ஸ்டேட்டஸை பார்த்து அதிர்ச்சியடைந்த பவுசியாவின் தோழி உடனடியாக குரோம்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஹோட்டல் அறையில் கழுத்து நெரிக்கப்பட்டு சடலமாகக் கிடந்த பவுசியாவின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அத்துடன் தப்பிக்க முயன்ற காதலன் ஆஷிக்கையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Kerala lovers police girlfriend
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe