காதலிப்பதாக கூறி பட்டதாரி இளம்பெண்ணை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த காதலனை போலீசார் கைது செய்தனர்.
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி பெண்ணுக்கும், நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தை சேர்ந்தவர் நம்பி மகன் சுரேஷ் (வயது 22) என்பவருக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. தனிமையில் சந்திக்கவேண்டும் என்று சுரேஷ் தனது ஆசையை அந்த பெண்ணிடம் வெளிப்படுத்தியுள்ளார். அப்பெண்ணும் இந்த அழைப்பை ஏற்று நேரில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு தொடர்ந்தது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காவல்கிணற்றில் உள்ள ஒரு விடுதியில் சுரேஷ் அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது சுரேஷ் அப்பெண்ணை பல கோணங்களில் படம் எடுத்ததுடன், செல்பியும் எடுத்துக் கொண்டார்கள்.
இந்த நிலையில் சுரேஷ் தனது நண்பன் அரிகரசுதனிடம் காதலியோடு எடுத்த போட்டோக்களை காண்பித்து நடந்த விவரங்களை கூறியுள்ளார். உடனே அரிகரசுதனுக்கு சுரேசின் காதலியை சந்திக்க விரும்பினான். காதலியின் நண்பன் தானே என்று அந்த பெண், அரிகரசுதனிடமும் அன்பாக பழகினாள். ஒரு சந்தர்ப்பத்தில் சுரேசும், அரிகரசுதனும் சேர்ந்து அந்த பெண்ணிடம் போட்டோக்களை வெளியே விடுவோம் என்று மிரட்டியதுடன், பாலியல் தொந்தரவு கொடுக்க தொடங்கினர்.
மேலும் அந்த பெண்ணிடம் தங்களுக்கு ரூ.20 ஆயிரம் தர வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ஆபாச படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டல் விடுத்தனர். பணம் தர தாமதமானதால், சுரேசும், அரிகரசுதனும் தங்களது வேறு நண்பர்களை விட்டு அந்த பெண்ணுக்கு போன் மூலம் பாலியல் தொல்லை தந்துள்ளனர்.
பின்னர் சுரேஷ் மற்றுங்ம அரிகரசுதனிடம் கேட்டப்படி பணம் தருவதாக கூறிய அந்த பெண், தனது உறவினர் ஒருவரிடம் நடந்த விவரங்களை கூறி அழுதுள்ளார். அவர் போலீசுக்கு போவதை தவிர வேறுவழியில்லை என்று அறிவுரை கூறியுள்ளார். பின்னர் உறவினரின் துணைபோடு இதுகுறித்து பணகுடி போலீசில் புகார் செய்தார்.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
போலீசார் நடந்த விவரங்களை கேட்டறிந்தனர். பின்னர் தாங்கள் சொன்னபடி செய்தால்தான் இருவரையும் பிடிக்க முடியும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த பெண் பணம் தயாராகிவிட்டது என்றும், காவல்கிணறு சந்திப்புக்கு வருமாறும் போன் செய்துள்ளார். பணம் பெறுதற்காக சுரேஷ், அரிகரசுதன் ஆகியோர் வந்தனர். அவர்கள் இருவரையும் அங்கு நின்ற பணகுடி போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.