ஆசை வார்த்தைகள் கூறி தனிமையில் இருந்த காதலன்; வேறொரு பெண்ணை மணந்ததால் கைது!

Boyfriend arrested for deceiving young woman by promising to marry her

சென்னை ஆலந்தூர் அருகே வசித்துவரக்கூடிய ரிஷி ஜோதி குமார் என்பவர், நீலாங்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் டெக்னிஷியனாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் மற்றொரு ஸ்கேன் செண்டரில் வேலை செய்யும் இளம்பெண் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதன் காரணமாக திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று ரிஷி ஜோதி குமார் தனிமையில் இருந்துள்ளார். இதனால் அந்த இளம்பெண் கர்ப்பமாகியுள்ளார்.

அதன்பிறகு கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டு அந்த பெண் கருவை கலைத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், அதன்பிறகு ரிஷி ஜோதிகுமார் அந்த இளம்பெண்ணிடம் பேசுவதை குறைத்துவந்ததாக கூறப்படுகிறது. மேலும், தன்னை திருமணம் செய்துகொள்ள அந்த பெண் கூறியதை ரிஷி ஜோதி குமார் மறுத்துள்ளார். இதனால் அந்த பெண் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் திடீரென ரிஷி ஜோதிகுமார் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ரிஷி ஜோதி குமார் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தனிமையில் இருந்துவிட்டு தற்போது வேறு ஒருரை திருமணம் செய்து கொண்டது குறித்து புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பரங்கிமலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி ரிஷி ஜோதிகுமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

boyfriend Chennai young girl
இதையும் படியுங்கள்
Subscribe