Advertisment

காதலியை ஏமாற்றிய காதலன் கைது! 

Boyfriend arrested for cheating on girlfriend

விழுப்புரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்ணும், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கொரட்டூர் கிராமத்தைச் சேர்ந்த வீரப்பன் என்பவரது மகன் 23வயது ஸ்ரீராம் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் அடிக்கடி பல்வேறு இடங்களுக்குச் சென்று தனிமையில் சந்தித்தும் வந்துள்ளனர்.

Advertisment

அதன் காரணமாக அந்த இளம்பெண் தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில், கர்ப்பிணியான காதலி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு காதலர் ஸ்ரீராமனிடம் வலியுறுத்தியுள்ளார். ஸ்ரீராம் அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டதால், மனம் நொந்து போன அந்த இளம்பெண் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் விசாரணை நடத்திய மகளிர் போலீசார், ஸ்ரீராம் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisment

Viluppuram
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe