திருவண்ணாமலை மாவட்டத்தில் கிணற்றில் குளித்ததற்காக நான்கு பேருடன் சென்ற சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பகுதியில் நான்கு நபர்களுடன் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் சந்தோஷ் குமார் என்ற மாணவன் கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். சரிவர நீச்சல் தெரியாமல் கிணற்றில் குதித்த சந்தோஷ் குமார் வெளியே வராததால் மற்றவர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். சுமார் அரை மணி நேர தேடுதலுக்கு பிறகு மாணவன் சந்தோஷ் குமார் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடலைப் பார்த்துப் பெற்றோர்கள் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.