Advertisment

பெண்ணை ஆபாசமாக படமெடுத்து மிரட்டிய சிறுவன்!

boy who threatened the girl with film

விருதுநகர் மாவட்டம் – திருத்தங்கல்லைச் சேர்ந்த 17 வயது சிறுவன், பெண்ணை ஆபாசமாக படமெடுத்து மிரட்டியுள்ளார். சிறுவனும், 36 வயதுள்ள பெண்ணும் அடுத்தடுத்த வீட்டில் குடியிருந்து வருகிறார்கள். அந்தப் பெண் தனது வீட்டு பாத்ரூமில் குளித்துக்கொண்டிருந்த போது, 17 வயது சிறுவன் பாத்ரூமின் மேல்பகுதியிலிருந்து செல்போனில் படம் பிடித்திருக்கிறார். தன் மீது செல்போன் வெளிச்சம் விழுந்தவுடன் அந்தப் பெண் சந்தேகத்துடன் மேலே பார்த்திருக்கிறார். உடனே அந்த சிறுவன் மறைந்துகொண்டார்.

Advertisment

பாத்ரூமிலிருந்து சேலையை உடுத்திக்கொண்டு அந்தப் பெண் வீட்டுக்கு வெளியே வந்து சிறுவனைஅழைத்துக் கேட்டபோது, தகாத வார்த்தையால் பேசியதோடு சேலையைப் பிடித்தும் இழுத்திருக்கிறார்.

Advertisment

மேலும், “நீ குளிக்கும்போது நான் செல்போனில் படம் பிடித்ததை வெளியில் சொன்னால் உன்னைக் கொன்றுவிடுவேன்” என்று மிரட்டியிருக்கிறார். அந்தப் பெண் உறவினர்களிடம் கலந்து பேசிவிட்டு திருத்தங்கல் காவல்நிலையத்தில் புகாரளிக்க, அந்த சிறுவன் மீது வழக்கு பதிவாகியிருக்கிறது.

boy virudunagar woman
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe