Skip to main content

சிறுமியை கடத்தி  போக்சோவில் கைதான சிறுவன்..! 

Published on 01/07/2021 | Edited on 01/07/2021

 

The boy who kidnapped the girl and arrested in Pocso

 

கோவை மாவட்டம், சின்னவேடம் பட்டியைச் சோ்ந்த 17 வயது சிறுமியைக் காணவில்லை என அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்த போலீஸார் அதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.


இந்நிலையில், அச்சிறுமியை நாகப்பட்டினம், வண்டிக்காரன் காடு பகுதியைச் சோ்ந்த 18 வயது சிறுவன் கடத்திச் சென்றது தெரியவந்தது. மேலும் விசாரணையில், அச்சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறிய சிறுவன் அவரை உடுமலைப்பேட்டையில் உள்ள ஜல்லிப்பட்டிக்கு அழைத்துச் சென்றது தெரியவந்தது.


இதுபற்றி தகவல் அறிந்த போலீஸார் அங்கே மறைந்திருந்த இருவரையும் மீட்டு கோவைக்கு அழைத்து வந்தனர். கோவையில் வைத்து விசாரித்தபோது, திருமணம் செய்வதாக கூறி சிறுமியை கடத்தி சென்று அச்சிறுவன் பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து  போக்சோ சட்டத்தில் அச்சிறுவனை போலீஸார் கைது செய்தனர்.

 

சார்ந்த செய்திகள்