The boy who got into danger while fetching the cricket ball was rescued

சென்னையில் கழிவுநீர் கால்வாயில் விழுந்த கிரிக்கெட் பந்தை எடுக்க சென்ற சிறுவன் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

சென்னை முகப்பேர் கிழக்கு கண்ணதாசன் சாலை பகுதியில் காலி மைதானத்தில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். அதன் அருகே ஒரு கால்வாய் கழிவுநீர் கால்வாய் ஒன்று இருக்கிறது. இந்நிலையில் வழக்கம்போல் இன்று சிறுவர்கள் அந்த பகுதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது பந்தானது கழிவுநீர் கால்வாயில் விழுந்துள்ளது.

சிறுவன் ஒருவன் பந்தை எடுப்பதற்காக இறங்கியுள்ளான். அப்பொழுது திடீரென உள்ளே விழுந்த சிறுவன் மாட்டிக் கொண்டு அலறியுள்ளான். இதுகுறித்து ஜே.ஜே.நகர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் தீயணைப்புத் துறையினருடன் வந்து சம்பவ இடத்திற்கு சென்று 10 அடிஆழம் கொண்ட கால்வாய்க்குள் சிக்கிக்கொண்ட சிறுவனை கயிறு மூலமாக பத்திரமாக மீட்டனர். முதற்கட்ட விசாரணையில் அந்த சிறுவனின் பெயர் அபிஷேக் (14) என்பது தெரியவந்துள்ளது.

Advertisment