Published on 08/11/2021 | Edited on 08/11/2021

திருச்சி மாவட்டம் தாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தங்கராசு மகன் குருபிரசாத். கட்டிடத் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் முசிறி காவிரி ஆற்றில் தனது நண்பர்களுடன் குளிக்கச் சென்றார். அப்போது குருபிரசாத் காவிரி ஆற்றில் மூழ்கினார்.
இது குறித்த தகவலின் பேரில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலைய அலுவலர் முனியாண்டி தலைமையிலான மீட்புப்படையினர் காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபரை இரவு வரை தேடியும் கிடைக்கவில்லை. இதனால் தேடுதல் அத்துடன் நிறுத்தப்பட்டது. இரண்டாவது நாளாக நேற்று மீட்புப்படையினர் காவிரி ஆற்றில் இறங்கி குருபிரசாத்தை தேடினர். ஆனால் மாலை வரை தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.