எச்சரிக்கையை மீறி கடலில் குளித்த சிறுவன்; பெற்றோர் கண்முன்னே நிகழ்ந்த சோகம்

The boy who defied the warning and bathed in the sea; The tragedy happened in front of the parents

பழவேற்காடு கடற்கரையில் எச்சரிக்கையை மீறி கடலில் குளித்த சிறுவன் பெற்றோர் கண்முன்னே அடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் கடலில் மாயமான சிறுவனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தீர்த்தக்கரையம்பட்டியை சேர்ந்த சுரேஷ் குமார் என்பவரின் மகன் திலக் பிரசன்னா திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கடற்கரைக்கு குடும்பத்துடன் சென்ற நிலையில் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது தடையை மீறி அவர் கடலில் இறங்கி குளித்ததாகக் கூறப்படுகிறது.திடீரென அலையில் சிக்கிக் கொண்ட சிறுவன் அடித்துச் செல்லப்பட்டான். பெற்றோர் கண்முன்னே சிறுவன் அடித்து செல்லப்பட்ட நிலையில் பெற்றோர்களும் அங்கிருந்தவர்களும் அலறித் துடித்தனர். இது தொடர்பான காட்சிகள் வெளியாகி உள்ளது. தொடர்ந்து மீனவர்கள் கடலில் மாயமான சிறுவனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

children sea thiruvallur
இதையும் படியுங்கள்
Subscribe