Advertisment

ஆதார் மூலம் கிடைத்த சிறுவன்; கண்டுபிடித்து கண்ணீர் வடித்த தந்தை

Boy through Aadhaar; The father shed tears after finding out

திருவாரூருக்கு அருகே காணாமல் போன மகனை ஒன்றரை ஆண்டுகளுக்குப்பிறகு தந்தை கண்டுபிடித்தார்.

Advertisment

திருவாரூர் மாவட்டம் இளவங்கார்குடி பகுதியைச்சேர்ந்த விறகு வியாபாரி அறிவழகன் மகன் மாதேஷ் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். சரி வர படிக்காததால் பெற்றோர் தொடர்ந்து திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் சிறுவன் வீட்டை விட்டு வெளியேறியதால் மகனைக் காணாமல் பெற்றோர் தேடி வந்தனர்.

Advertisment

இந்நிலையில் புதிதாக ஆதார் அட்டைக்கு மாதேஷ் விண்ணப்பித்த நிலையில் அந்த அட்டை இளவங்கார்குடி வீட்டிற்குச் சென்றது. இது தொடர்பாக காவல்துறைக்குப் பெற்றோர் தகவல் தெரிவித்தனர்.

காவல்துறையினர் விசாரித்ததில் சிறுவன் மாதேஷ் மும்பையில் இருப்பது தெரியவந்தது. தந்தையை அழைத்துக்கொண்டு மும்பை சென்ற காவல்துறையினர் அங்கு இருந்த சிறுவனை மீட்டனர்.

Mumbai Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe