Advertisment

தேனீக்கள் கொட்டிய சிறுவன் உயிரிழப்பு!

Boy passed by bees bite

Advertisment

கிருஷ்ணகிரி மாவட்டம் புலி குண்ட என்ற கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் நான்கு வயது ஜீவிதன். முருகன் சென்னையில் வாடகை வீட்டில் தங்கிக்கொண்டு அப்பகுதியில் உள்ள ஸ்வீட் கடையில் வேலை பார்த்து வருகிறார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகில் உள்ள நடுவனநந்தல் கிராமம் முருகனின் சொந்த பூர்வீக ஊர். இந்த ஊரில் நடந்த விழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த 20ஆம் தேதி தனது மகன் ஜீவிதம் உடன் சென்றார். அங்கு சிறுவன் ஜீவிதன் சில பையன்களுடன் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். அப்பகுதியில் இருந்த ஒரு மாமரத்தில் தேனீக்கள் கூடுகட்டி இருந்துள்ளது.

அதில் யாரோ சில இளைஞர்கள் கல்லை விட்டு எறிந்துள்ளனர். இதனால் கூடு கலைந்து அதில் இருந்த தேனீக்கள் கும்பலாக புறப்பட்டு அங்கு நின்று கொண்டிருந்த சில சிறுவர்களை கொட்டியுள்ளது. ஜீவிதனையும் தேனீக்கள் கொட்டியுள்ளது. இதனால் சிறுவன் மயக்கமடைந்துள்ளார். உடனடியாக சிறுவன் ஜீவிதனை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் ஜீவிதன் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இதுகுறித்து வெள்ளிமேடு பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனீக்கள் கொட்டியதில் சிறுவன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

passed boy Krishnagiri
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe