திருச்சி பெரியகடைவீதி ஜின்னா தெருவை சேர்ந்த சையது இப்ராகீம் பாஷா என்பவரின் மகன் அப்துல் ரஹ்மான்(16). இவர் தனது நண்பர்கள் முகமது பயாஸ், சதாம் உசேன், பயாஸ் செரீப் ஆகியோருடன் குளிப்பதற்காக கம்பரசம் பேட்டை தடுப்பணைக்கு சென்று அங்குள்ள படித்துறையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பியை தாண்டி வௌியில் சென்று குளித்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவர் நீரில் அடித்து செல்லப்பட்டார். நண்பர்களால் காப்பாற்ற இயலாத சூழலில் இது குறித்து போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு வீரர்கள் நீண்ட தேடலுக்கு பின்னர் அப்துல் ரஹ்மானின் உடலை அய்யாளம்மன் படித்துறை அருகே கண்டெடுத்தனர். உடலை கைப்பற்றிய ஜீயபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.