Boy passed away ... Family in grief

Advertisment

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வளநாடு பகுதியில் உள்ள சொக்கம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவருடைய ஐந்து வயது மகன் சிவராஜ், நேற்று (09.08.2021) வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தார்.

வீட்டிற்கு அருகே உள்ள குடிநீர் தொட்டியில் நீர் நிரம்பியிருந்த நிலையில், தொட்டிக்கு அருகில் நின்று விளையாடிக்கொண்டிருந்த சிவராஜ் மீது தொட்டியின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர்கள், குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால்சிவராஜை சோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுவன் எதிர்பாராதவிதமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.