திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் செந்தில்குமார் தம்பதியர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் தீபன்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) வயது(11). இவர் மொராய்ஸ் சிட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று (13.3.2024) மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துண்டால் தொட்டில் கட்டி அதில் ஊஞ்சலாடி விளையாடியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக துண்டு கழுத்தில் இறுக்கி தீபன் உயிரிழந்தார். இது குறித்து கண்டோன்மென்ட் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.