the boy missing who drowned in the pool ..!

Advertisment

திருச்சி, என்.ஐ.டி. கல்லூரியில் ஊழியராக பணியாற்றிவருபவர் புதுக்கோட்டையைச் சேர்ந்த பாஸ்கர்.இவருக்கு ஹரிஷ் (15), அகிலன் (12) என்ற 2 மகன்கள் உள்ளனர்.அவர்கள் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்துவருகிறார்கள்.

இந்நிலையில், ஹரிஷ், அகிலன் இருவரும்அவர்களது இரண்டு நண்பர்களுடன் பழங்கனாங்குடி பகுதியில் உள்ள கட்டளை வாய்க்காலில் நேற்று (13.09.2021) குளித்துள்ளனர். அப்போது ஹரிஷ் தண்ணீரில் மூழ்கி மாயமானான். இதுபற்றி ஹரிஷின் தம்பி அகிலன் மற்றும் அவரது நண்பர்கள் பெற்றோருக்குத் தகவல் கொடுத்தனர்.அதன் அடிப்படையில் பெற்றோர் மற்றும் பழங்கனாங்குடி சுற்றுவட்ட பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தண்ணீரில் இறங்கி ஹரிஷை தேடி பார்த்துள்ளனர்.ஆனால், ஹரிஷின்உடல் கிடைக்கவில்லை.தற்போது துவாக்குடி காவல்துறையினர் மாணவன் ஹரிஷை தேடும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.