Advertisment

செல்போன் அதிக நேரம் பயன்படுத்தியதை கண்டித்த பெற்றோர்; விபரீத முடிவு எடுத்த சிறுவன்!

boy made a bizarre decision after being reprimanded by his parents

Advertisment

திருப்பூர் மாவட்டம் அலங்கியம் பகுதியைச் சேர்ந்தவர் 13 வயது சிறுவன் சித்தார்த். இவர் அருகே உள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார். சிறுவன் சித்தார்த்திற்கு பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு வந்ததில் இருந்து அதிகம் செல்போன் பயன்படுத்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. அதனால், அவர்களது பெற்றோர் சிறுவனை அதிகம் நேரம் செல்போன் பயன்படுத்தக் கூடாது, படிப்பில் கவனம் செலுத்துமாறு தெரிவித்திருக்கின்றனர்.. ஆனாலும், சிறுவன் செல்போன் பயன்படுத்துவதைக் குறைத்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் நேற்று சிறுவன் சித்தார்த் அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சித்தார்த் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்துள்ளார். அதன்பிறகு மயக்கமடைந்து சித்தார்த் கீழே விழுந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சித்தார்த் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து தகவலில் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதைக் கண்டித்ததால் சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

boy police tirupur
இதையும் படியுங்கள்
Subscribe