Skip to main content

மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு

Published on 25/05/2024 | Edited on 25/05/2024

 

Boy lose their live due to electric shock

சங்கரன்கோவிலில் மின்சாரம் தாக்கி 7 ஆம் வகுப்பு சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் பரவலாக கோடை மழை பெய்து வரும் நிலையில், பல இடங்களில் இடி மின்னல் பலத்த காற்றுடன் மழை பொழிந்து வருகிறது. சில இடங்களில் பலத்த காற்று காரணமாக மின் கம்பிகள் அறுந்து விழுந்து, அதை தெரியாமல் மிதித்து சிலர் உயிரிழந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் நெல்லையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்தது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் புதுசுப்புலாபுரம் கிராமத்தில் 7 ஆம் வகுப்பு பயின்று வந்த சிறுவன் அகிலேஷ் மின் கம்பத்தை பிடித்து போது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

புதிய தமிழகம் கிருஷ்ணசாமியைத் தடுத்து நிறுத்திய வனத்துறை; கட்சியினர் வாக்குவாதம்

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
nn

திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சுமார் 75,000 ஏக்கர் பரப்பளவு காடுகளில் 8,000 ஏக்கர் நிலப்பரப்பு தனியார் தேயிலைத் தோட்ட நிறுவனத்திற்காக 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. இந்தக் குத்தகை 2028 ஆம் ஆண்டில் முடிவடைகிறது. மாஞ்சோலை, மணிமுத்தாறு, ஊத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொழிலாளர்கள் தங்கி அங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றி வந்தனர்.

குத்தகை முடிவதற்கு முன்பாகவே தனியார் நிறுவனம் ஒன்று தங்களுடைய பணியை நிறுத்திக் கொள்வதாக தகவல் வெளியாகி இருந்தது. இதனையடுத்து, அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தங்களுடைய நலனுக்காக விருப்ப ஓய்வு பெற்றுக் கொள்ளலாம் என இதற்கான அறிவிப்பை தனியார் நிறுவனம் நோட்டீஸ் வாயிலாக வெளியிட்டது. மேலும், அங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையிலும் அந்தத் தனியார் தேயிலைத் தோட்ட நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் இருந்து ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு முன்னதாக தொழிலாளர்கள் வெளியேற வேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் திருநெல்வேலி மாஞ்சோலையைச் சேர்ந்த அமுதா என்பவர் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘மாஞ்சோலையில் இரண்டு மூன்று தலைமுறைகளாக வசித்து வருகிறோம். மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்திற்கான உரிமம் வருகிற 2028 ஆம் ஆண்டில்தான் முடிவடைகிறது. இந்த உரிமத்தை புதுப்பிதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்காமல், இங்கு வாழக்கூடிய மக்களை அங்கிருந்து காலி செய்யக்கூடிய நடவடிக்கையை அரசும், தேயிலைத் தோட்ட நிர்வாகமும் எடுத்து வருகிறது. எனவே, இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்.

அங்கு பணிபுரியும் தொழிலாளர்களை வெளியேற்றுவதால் மறுவாழ்வுக்கான எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. குறிப்பாக, மாஞ்சோலையில் இருந்து தொழிலாளர்கள் வெளியேற்றப்படும் போது மாஞ்சோலையைச் சேர்ந்த 700 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும். மேலும், மறு பணி வாய்ப்பு வழங்கும் வரை ஒரு குடும்பத்திற்கு ரூ.10,000 வழங்க வேண்டும். இழப்பீடு தொகையை அதிகரித்து கொடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கைக்கு நடவடிக்கை எடுக்கும் வரை மாஞ்சோலையில் இருந்து யாரும் வெளியேற்றும் நடவடிக்கையை எடுக்கக் கூடாது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பான மனு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிமன்றம், ‘நெல்லை மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. மேலும், தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதிகளை செய்து தரும்வரை யாரையும் வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது’ என்று உத்தரவிட்டுள்ளது.

nnஇந்நிலையில் நெல்லையில் மாஞ்சோலை மக்களைச் சந்திப்பதற்காக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி சென்றுள்ளார். அனுமதியை மீறி அவர் அதிகமாக வாகனங்களில் சென்றதாக மணிமுத்தாறு சோதனை சாவடியில் வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் அவரைத் தடுத்து நிறுத்தினர். அதனைத் தொடர்ந்து கட்சியின் நிர்வாகிகள் வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்குச் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

பம்புசெட்டில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நிகழ்ந்த துயரம்; சோகத்தில் கிராம மக்கள்

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Tragedy befell the boys who went to bathe in Pampuset; Villagers in sorrow

விழுப்புரத்தில் மின் கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி சிறுவர்கள் இருவர் உயிரிழந்தது பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ளது தடுத்தாட்கொண்டூர் கிராமம். இந்தப் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் மற்றும் சப்தகிரி ஆகிய இரண்டு சிறுவர்கள் அந்தப் பகுதியில் உள்ள வயல்வெளியில் உள்ள பம்பு செட்டில் குளித்து கொண்டிருந்தனர். அப்பொழுது மேலே சென்ற மின்கம்பி திடீரென அறுந்து வாய்க்கால் தண்ணீரில் விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி சிறுவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உயிரிழந்த சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு திருவெண்ணைநல்லூர் போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பம்புசெட்டில் குளித்துக் கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி இரண்டு சிறுவர்கள் ஒரே இடத்தில் உயிரிழந்தது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.