k

திருவாரூரில் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் எதிர்பாராதவிதமாக மின்கம்பி மீது பட்டு தூக்கி வீசியதில் பலியான வீடியோ வெளியாகி பலரையும் பதறவைத்துள்ளது.

Advertisment

திருவாரூர் நேதாஜி சாலையில் ராஜஸ்தான் மாநிலம் ராஜ்கோட் பகுதியைச் சேர்ந்த ஹரிஷ்சிங் என்பவரது மகன் பிரவீன் சிங் திருவாரூரில் உள்ள தனியார் பள்ளிஒன்றில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு வீட்டின் மாடியில் விளையாண்டுகொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டிற்கு வெளியே சென்ற மின்கம்பி மீது அவரது கைபட்டு மின்சாரம் தாக்கி சாலையில்தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே அந்த சிறுவன் உயிரிழந்தான்.

Advertisment

உறவினர்களோ இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு எதுவும் தகவல் தெரிவிக்காமல் அவசர அவசரமாக அடக்கம் செய்துள்ளனர். இந்த தகவல் போலீஸாருக்கு தெரிந்து விசாரித்து வருகின்றனர். சிறுவன் மின்சாரம் தாக்கி வீசப்பட்ட சிசிடிவி வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.