Advertisment

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த சிறுவன் பலி

boy fell into water tank passed away dharmapuri

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வெங்கடசமுத்திரத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வன்(35). இவர் கூலித்தொழிலாளி. இவருக்குமோனிகா (5), கோவிந்தராஜ் (4), கனிமொழி (3) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.

Advertisment

இவர்களில் கோவிந்தராஜுக்கு பிறவியில் இருந்தே வாய் பேச வராது. இந்நிலையில், நவ.10-ம் தேதி மாலை, வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் கோவிந்தராஜ்திடீரென்று காணாமல் போயுள்ளார். பெற்றோர் அக்கம்பக்கத்தில் விசாரித்தனர். சிறுவன் சென்ற இடம்தெரியவில்லை.

Advertisment

அப்போது வீட்டின் அருகே உள்ள தண்ணீர்தொட்டியில் கோவிந்தராஜ் மூச்சுப் பேச்சின்றி கிடப்பது தெரியவந்தது. அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

மருத்துவப் பரிசோதனையில் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரிய வந்தது. இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தண்ணீர்தொட்டிக்குள் தவறி விழுந்ததில் சிறுவன் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

boy dharmapuri police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe