/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vbdf.jpg)
சென்னையில் சிறுவன் ஒருவன் ஆறாவது மாடியில் இருந்து கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள மண்ணடி பகுதியை சேர்ந்தவர் உசேன். இவர் அப்பகுதியில் மிதிவண்டியில்டீ விற்று வருகிறார். அவருடைய மகன் ரியாஸ்,பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அப்பாவிற்கு உதவியாக அடிக்கடி டீ விற்க இவரும் செல்வார். இந்நிலையில், இன்று அரண்மனைகாரன் தெருவில் வீடு கட்டுமான பணி நடைபெற்று வந்த நிலையில், அந்த கட்டிடத்திற்கு சென்று ரியாஸ் டீ சப்ளை செய்து வந்துள்ளார். எதிர்பாராதவிதமாக ஆறாவது மாடியில் டீ கொடுத்து கொண்டிருக்கும்போது கால் இடறி கீழே விழுந்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் மரணமடைந்தார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இதுகுறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)