டூ வீலரை ஓட்டிய சிறுவர்கள்; தந்தை,  மாமன் கைது செய்த போலீஸ்! 

Boy father arrested for driving two-wheeler threateningly

வேலூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பழைய பேருந்து நிலையம் அண்ணா சாலையில் 18 வயது நிரம்பாத சிறுவன் டூவீலரில் ரேஸ் போல அச்சுறுத்தும் வகையில் சென்றுள்ளான். இதை அந்த வழியே சென்றபோது பார்த்த வேலூர் எஸ் பி மதிவாணன் சிறுவனை பிடித்து காவல் நிலையம் அனுப்பி வைத்தார். பின்னர் போலீசார் சிறுவனின் தந்தை மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

அதேபோல வேலூர் சாரதி மாளிகை எதிரே மூன்று பள்ளி மாணவர்கள் ஒரே டூவீலரில் சென்றபோது அந்த பகுதியில் வாகனத் தணிக்கையில் இருந்த வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் டூவீலரை பறிமுதல் செய்து மாணவர்களை அழைத்துச் சென்றனர். பின்னர் டூவீலரின் உரிமையாளரான, மாணவர்களின் மாமாவின் மீது வழக்குப் பதிந்த போலீசார் கைது செய்தனர்.

டூவீலரின் வாகனப் பதிவு சான்றினை 12 மாதத்திற்கு ரத்து செய்யவும், வாகனத்தை ஓட்டிய சிறுவர்களுக்கு 25 வயது முடியும் வரை வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதை தடை செய்யவும் காவல்துறை மோட்டார் வாகன ஆய்வாளருக்கு பரிந்துரை செய்துள்ளது. மேலும் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் வேலூர் மாவட்டத்தில் வாகனத்தை இயக்கினால், பெற்றோர் மீது வழக்குப்பதிந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

arrested police
இதையும் படியுங்கள்
Subscribe