The boy called by name 'Pinarai Vijaya...'; The Chief Minister was happy to shake hands

Advertisment

கேரள முதல்வர் பினராயி விஜயனை சிறுவன் ஒருவன் 'ஹலோ பினராயி விஜயா' என பெயர் சொல்லி அழைத்து, கை கொடுத்த வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்த பொழுது, கேரள முதல்வர் பினராயி விஜயனை சுற்றி நின்றிருந்த பாதுகாப்பு வீரர்களுக்கு இடையே ஊர்ந்து சென்ற குட்டிச் சிறுவன் ஒருவன் 'பினராயி விஜயா... பினராயி விஜயா'..' என அவருடைய பெயரைச் சொல்லி அழைத்தான். உடனடியாக நின்ற முதல்வர் சிறுவனுக்கு சிரித்த படிகை கொடுத்தார். அந்த சிறுவனும் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான். இந்த சம்பவம் தொடர்பான க்யூட் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.