Advertisment

‘பாய் பெஸ்டி’ தொல்லைகள்; தாம்பரம் காவல் ஆணையர் வரை சென்ற வைரல் வீடியோ

Boy Bestie Troubles; The viral video reached the police commissioner of Tambaram

தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியில் உள்ள குளக்கரை நடைப்பயிற்சி பாலத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், காதலர்கள் என்ற போர்வையில் சிலர் சில்மிஷத்தில் ஈடுபடுவதும் தாக்கிக் கொள்வதும் அரங்கேறி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Advertisment

அண்மையில் இளம்பெண் ஒருவர் தனது காதலனை இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டுசந்தோஷபுரம் குளக்கரையில் உள்ள நடைப்பயிற்சி பாலத்திற்கு வந்துள்ளார். அப்போது அந்தப் பெண்ணின் மற்ற பாய் பெஸ்டிகள் என மூன்று ஆண் நண்பர்கள் அங்கு வந்துள்ளனர். திடீரென பெண்ணின் காதலனை அந்த மூன்று இளைஞர்களும் சரமாரியாகத்தாக்கத் தொடங்கியுள்ளனர். தாக்கிவிட்டு மூன்று இளைஞர்களும் சென்ற நிலையில், நாம் இருவரும் இங்கு வந்தது எப்படி அவர்களுக்கு தெரியும் என காதலியின் ஃபோனை வாங்கிப் பார்த்துள்ளார்அந்த இளைஞர். அப்பொழுது வாட்ஸ் அப் மூலம் பாய் பெஸ்டிகள் மூன்று பேருக்கும் அப்பெண் தகவல் தெரிவித்து இருந்தது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த காதலன், 'ஆள் வைத்தா அடிக்கிற' என காதலியை சரமாரியாகத்தாக்குகிறார்.

Advertisment

அதேபோல் அங்கே வந்திருந்த மற்றொரு காதல் ஜோடி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள முயன்ற நிலையில், அந்த இளைஞரும் பெண்ணை கழுத்தை நெரித்து பாலத்தில் இருந்து தலைகீழாக வீச முயல்கிறார். இப்படி இந்த பகுதியில் அடிக்கடி காதல் என்ற பெயரில் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுவதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த வீடியோவை தாம்பரம் காவல் ஆணையருக்கு அனுப்பி வைத்த அப்பகுதி குடியிருப்பு வாசிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

lovers thamparam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe