Skip to main content

‘பாய் பெஸ்டி’ தொல்லைகள்; தாம்பரம் காவல் ஆணையர் வரை சென்ற வைரல் வீடியோ

Published on 31/08/2023 | Edited on 31/08/2023
Boy Bestie Troubles; The viral video reached the police commissioner of Tambaram

 

தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியில் உள்ள குளக்கரை நடைப் பயிற்சி பாலத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், காதலர்கள் என்ற போர்வையில் சிலர் சில்மிஷத்தில் ஈடுபடுவதும் தாக்கிக் கொள்வதும் அரங்கேறி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

 

அண்மையில் இளம்பெண் ஒருவர் தனது காதலனை இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு சந்தோஷபுரம் குளக்கரையில் உள்ள நடைப்பயிற்சி பாலத்திற்கு வந்துள்ளார். அப்போது அந்தப் பெண்ணின் மற்ற பாய் பெஸ்டிகள் என மூன்று ஆண் நண்பர்கள் அங்கு வந்துள்ளனர். திடீரென பெண்ணின் காதலனை அந்த மூன்று இளைஞர்களும் சரமாரியாகத் தாக்கத் தொடங்கியுள்ளனர். தாக்கிவிட்டு மூன்று இளைஞர்களும் சென்ற நிலையில், நாம் இருவரும் இங்கு வந்தது எப்படி அவர்களுக்கு தெரியும் என காதலியின் ஃபோனை வாங்கிப் பார்த்துள்ளார் அந்த இளைஞர். அப்பொழுது வாட்ஸ் அப் மூலம் பாய் பெஸ்டிகள் மூன்று பேருக்கும் அப்பெண் தகவல் தெரிவித்து இருந்தது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த காதலன், 'ஆள் வைத்தா அடிக்கிற' என காதலியை சரமாரியாகத் தாக்குகிறார்.

 

அதேபோல் அங்கே வந்திருந்த மற்றொரு காதல் ஜோடி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள முயன்ற நிலையில், அந்த இளைஞரும் பெண்ணை கழுத்தை நெரித்து பாலத்தில் இருந்து தலைகீழாக வீச முயல்கிறார். இப்படி இந்த பகுதியில் அடிக்கடி காதல் என்ற பெயரில் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுவதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த வீடியோவை தாம்பரம் காவல் ஆணையருக்கு அனுப்பி வைத்த அப்பகுதி குடியிருப்பு வாசிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.