Advertisment

பிளஸ்2 மாணவியைக் கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த சிறுவன்!

Boy arrested for misbehaving with Plus 2 student in Pocso

அந்தியூர் பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் மாணவி ஒருவர் அதே பகுதியில் கோழி இறைச்சிக்கடையில் வேலை பார்க்கும் சிறுவன் ஒருவருடன் பழகி வந்துள்ளார். இந்த விவகாரம் மாணவியின் வீட்டுக்குத்தெரிந்து அவரை கண்டித்துள்ளனர்.

Advertisment

இந்நிலையில் கடந்து 2 நாட்களுக்கு முன்பு மாணவி திடீரென மாயமானார். இதனை அடுத்து மாணவியின் பெற்றோர் தங்களது மகளை சிறுவன் கடத்திச் சென்று விட்டதாகப் பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்னம்மாள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். மேலும் மாணவி மற்றும் சிறுவனைத்தேடி வந்தனர்.

Advertisment

இந்நிலையில் அந்தியூர் பஸ் நிலையம் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த சிறுவன், சிறுமியை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டபோது, அது மாயமான பிளஸ்- 2 மாணவி எனத்தெரிய வந்தது. தொடர்ந்து மாணவியிடம் விசாரித்த போது, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிறுவன், மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை கடத்திச் சென்றுள்ளது தெரிய வந்தது. மேலும் மாணவிக்கு, சிறுவன் பாலியல் தொந்தரவு கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து பவானி அனைத்து மகளிர் போலீசார் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். பின்னர் சிறுவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

arrested POCSO
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe