Advertisment

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாக்ஸிங் பயிற்சியாளர் கைது...!

கோவையில் பாக்ஸிங் பயிற்சிக்கு சென்ற பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி பயற்சியாளரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Advertisment

Boxing coacher-arrested-in-pocso-act

கோவை மாவட்டம் பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த சிபு என்பவர் கோவைப்புதூர் பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு பயன்று வருகிறார். கல்லூரி நேரம்போக மற்ற நேரத்தில் கோவைப்புதூர் பகுதியில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான பாக்ஸிங் பயிற்சி பள்ளியில் உதவி பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறார்.

இவர் பயிற்சிக்கு வரும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பயிற்சிக்கு வந்த ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவிக்கு சிபு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, தனது செல்போனில் படம் பிடித்து மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறவே அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிபுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

POCSO ACT arrested police boxing
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe