Bouquet of misery

இந்த கரோனாகாலம் ஏற்றுமதி முதல் சிறு, குறு என எல்லா தொழில்களையும் முடக்க வைத்து விட்டது. ஒரு திருமணம், திருமண மண்டபத்தில் நடந்தால் பந்தல் அமைப்பவர் முதல், நாதஸ்வரம், சமையல் கலைஞர்கள், கேமராமேன், லைட் செட், மண அறை செட் அமைப்பவர்கள் என இந்ததொழில் சார்ந்தவர்களுக்கும் வேலை வாய்ப்பு ஒவ்வொரு திருமண வசதிப்படி இருக்கும். இப்போது அரசு உத்தரவுப்படி எதுவும் இல்லை. இத்தொழில் புரிவோர் கடந்த 70 நாட்களாக வருவாய் இன்றி பரிதாப நிலையில் உள்ளார்கள்.

Advertisment

Advertisment

ஈரோட்டில் இன்று அத்தொழில்களில் ஈடுபடுவோர் தாலுகா அலுவலகம் வந்து பொதுமக்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் திருமணம் சார்ந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் என்பதை மக்களிடம் வலியுறுத்தினார்கள். அவர்கள் அமைப்பான தமிழ்நாடு டெணட் டீலர்ஸ் அண்ட் டெக்ரேடர்ஸ் நலச்சங்கத்தினர் மக்களுக்கு இலவசமாக பூக்கள் கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். என்ன செய்வது பிழைக்க வழி விடுங்கள் என அரசிடம் கேட்டால் கரோனா... கரோனா... என்று அபயக்குரலை கொடுக்கிறது. ஆகவே தான் மக்களுக்கு மகிழ்ச்சி என்கிற பூங்கொத்து கொடுத்து எங்கள் துன்ப நிலையை கூறுகிறோம் என்றார்கள்.