சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் இன்று (11/07/2022) காலை 09.00 மணிக்கு அ.தி.மு.க.வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

இதனைத்தொடர்ந்து தொண்டர்களுடன், செய்தி சேகரிக்கபத்திரிகையாளர்களும் அங்கு திரண்டுள்ளனர். இந்நிலையில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை பவுன்சர் வாசலிலேயே தடுத்து நிறுத்தி உள்ளனர். இதனால் அங்கு பவுன்சர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment