75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. வருகின்ற 26ஆம் தேதி இந்தியா முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் அதிகம் நடமாட கூடிய இடங்களில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது.
திருச்சியில் இருந்து புறப்பட்ட எர்ணாகுளம் விரைவு ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். அப்போது கேட்பாரற்று கிடந்த இரண்டு பைகளை பறிமுதல் செய்தனர். அதில் 24 மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு சுமார் 6,500 ரூபாய் வரை இருக்கலாம் என்று பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.