Advertisment

'நல்ல செய்தியை இருவரும் அறிவிப்பார்கள்'-பாமகவின் ஜி.கே.மணி பேட்டி

 'Both will announce the good news' - PMK's G.K. Mani interview

பா.ம.க.வின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரின் மகன் அன்புமணிக்கும் இடையே கட்சிக்குத் தலைமை தாங்குவது, வழிநடத்துவது தொடர்பாகக் கடுமையான பனிப்போர் நிலவி வருகிறது. இதற்கிடையே விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் கடந்த 29ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்து, அன்புமணி மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது.

Advertisment

இதனைத் தொடர்ந்து நேற்று (05/06/2025) காலை தைலாபுரம் தோட்டத்தில் அன்புமணி, ராமதாஸுடன் சந்திப்பு மேற்கொண்டனர். சுமார் 45 நிமிடம் இந்த சந்திப்பு நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் சைதை துரைசாமி ஆகிய இருவரும் ஒரே காரில் வந்து தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் உடன் சந்திப்பு மேற்கொண்டனர்.

 'Both will announce the good news' - PMK's G.K. Mani interview

இந்நிலையில் தைலாபுரம் தோட்டத்தில் பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது பேசுகையில், ''முன்னேற்றத்தின் அறிகுறிதான் இருவரும் சந்தித்திருப்பது. முன்னேற்றம் இல்லாமல் சந்திக்க முடியுமா? ஒரு தீர்வை நோக்கி இல்லாமல் சந்திக்க முடியாது. ஒரு பெரிய வெற்றிகரமான மாநாடு. அதில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பேசினர்.அதன்பிறகு நெருக்கடியான சூழல் உருவாகிவிட்டது. அதன் பிறகு இருவரும் சந்தித்தார்கள் என்றால் அது நல்ல அறிகுறித்தானே? இவரும் பேசிக்கொண்டது எல்லோருக்கும் மகிழ்ச்சி. நல்ல செய்தியை ராமதாஸும், அன்புமணியும் அறிவிப்பார்கள்'' என்றார்.

anbumani ramadoss Ramadoss pmk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe