
சாத்தான்குளம் அரசடி தெருவை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ்(58), அவரது மகன் பென்னிக்ஸ்(31) ஆகியோரை, விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் கொடூரமாக தாக்கியதில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் தமிழக முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வரும் நிலையில் தந்தையையும், மகனையும் போலீசார் கொடூரமாகத் தாக்கியதாக சிபிஐ உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வாதத்தை முன்வைத்துள்ளது.
இந்த வழக்கில் பிணைகோரிய குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சார்பு ஆய்வாளர் ரகு கணேசுவின் மனு மீதான விசாரணையில் சிபிஐ இந்த வாதத்தை முன்வைத்துள்ளது. மேலும் 'நாடுமுழுவதும் இரவில் மக்கள் நிம்மதியாக தூங்குவதற்ககு காரணம் போலீசார்தான். காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ள சக்தி மக்களை காப்பாற்றவே. ஆனால் அதனை துஷ்பிரயோகம் செய்துள்ளனர்'என்றும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us