Advertisment

போர்ஜரி கையெழுத்தால் தள்ளுபடியான வேட்புமனு.! வன்முறை வெறியாட்டத்தில் அ.தி.மு.க.!!

ni

வேட்பாளருக்குப் பதிலாக, வேறொருவர் வேட்புமனுவில் கையெழுத்திட்டதால் மனு தள்ளுபடியாக நாற்காலிகளை உடைத்து வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ஆளுங்கட்சியினர்.

Advertisment

neduvasal

திருநெல்வேலி மேலப்பாளையம் நகர கூட்டுறவு வங்கி தேர்தலுக்கான தலைவர் பதவிக்காக அ.தி.மு.க. தரப்பில் ஹயாத் என்பவரும். டி.டி.வி.அணி தரப்பில் ஹைதர் அலி என்பவரும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

n

இவ்வேளையில் தலைவர் பதவிக்காகப் போட்டியிட்ட அ.தி.மு.க. ஹயாத் புனிதயாத்திரையாக வெளிநாடு சென்றிருக்க, அவருக்குப் பதிலாக அவருடைய கையெழுத்தை இன்னொருவர் போட்டு படிவத்தை நிரப்பி கொடுத்துள்ளார். இந்நிலையில் வேட்புமனு பரிசீலனை தற்பொழுது நடைப்பெற்று வருகிறது.

ni

இதில் போலி கையெழுத்திட்டுள்ளதாக எதிர்த்தரப்பினர் ஆட்சேபனை தெரிவித்த நிலையில் அ.தி.மு.க. வேட்பாளரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் கோபமடைந்த ஆளும் அ.தி.மு.க.வினர் நாற்காலி, டேபிள்களை உடைத்து பயங்கர வன்முறையில் ஈடுபட போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அங்கு பதட்டம் நிலவி வருகின்றது.

police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe