BOOTH COMMITTEE CONSULTATION MEETING INITIATED BY OPS

Advertisment

கடந்த வருடம் ஜூன் 22 ஆம் தேதி அதிமுகவின் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் முதல்முறையாக இன்று அதிமுக பொதுக்குழு கூடியுள்ளது.

அதிமுகவின் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில்நடைபெறும் இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் 23 தீர்மானங்களை இபிஎஸ் முன்மொழிய, கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் வழிமொழிந்துள்ளார்.

ஒரு பக்கம்அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் பரபரப்பாக நடந்து முடிந்திருக்கும் நிலையில், கோவையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 'அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு ஆலோசனை குழு 'என்ற பெயரில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் கோவை சூலூர் அருகே உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் இந்த கூட்டமானது தொடங்கி நடைபெற்றுள்ளது.

Advertisment

BOOTH COMMITTEE CONSULTATION MEETING INITIATED BY OPS

ஓபிஎஸ்-இன் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், புகழேந்தி ஆகியோர் இதில் கலந்து கொண்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்பட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்களும் இக்கூட்டத்திற்கு வந்துள்ளனர். இன்றிலிருந்து தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அடுத்த மாதம் 24 ஆம் தேதி வரை இந்த சுற்றுப்பயணம் நடைபெற இருப்பதாகக் கூறப்படுகிறது.