Advertisment

பூத் ஏஜெண்டுகள் வாக்குவாதம்... சோழவரத்தில் போலீசார் தடியடி!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 27ம் தேதி மற்றும் 30 ஆம்தேதி என இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

Advertisment

நடத்தப்பட்ட இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி இரண்டாம் தேதி (இன்று) எண்ணப்பட்டுமுடிவுகள் வெளியிடப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில்,இன்று வாக்குகளை எண்ணும் பணி துவங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் 315 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

local eletion

அரியலூர்- ஜெயங்கொண்டத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கவில்லை. வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு காலை உணவு வழங்கப்படாததால் வாக்கு எண்ணிக்கை தொடங்கவில்லை.

Advertisment

சிவகங்கை திருபுவனம் ஒன்றியத்தில் 58 தபால் வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாததால் 60 ஓட்டுகளில் 58 ஓட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் சோழவரத்தில் வைக்கும் எண்ணும் மையத்தில் பூத் ஏஜெண்டுகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போலீசார் தடியடி நடத்தினர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

local election Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe