உலகம் முழுக்க கொரோனாவினை எதிர்கொள்ள தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுவருகின்றன. இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள இரண்டு தவணை தடுப்பூசி முதலில் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், மீண்டும் கொரோனா பரவல் சில இடங்களில் ஏற்படுவதை அடுத்து மூன்றாம் தவணையாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னை தலைமைச் செயலக பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார்.
தலைமைச் செயலக பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி (படங்கள்)
Advertisment