ிுப

இந்தியாவில் குறைந்து வந்த கரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, இந்தியாவில் முக்கிய நபர்கள், அரசியல்வாதிகள் மற்றும் திரைப்பிரபலங்களுக்கு கரோனா தொற்று தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகிறது.

Advertisment

இந்நிலையில் இதைக் குறைக்கும் நோக்கில் தற்போது இந்தியா முழுவதும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முன்களப் பணியாளர்கள், 60 வயதைக் கடந்த இணை நோய் உள்ளவர்களுக்கு முதற்கட்டமாக பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமைகளில் பூஸ்டர் டோஸ் சிறப்பு முகாம் தமிழகத்தில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றும் தமிழகம் முழுவதும் 600 இடங்களில் பூஸ்டர் டோஸ் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 160 இடங்களில் சிறப்பு முகாம் செயல்படுகிறது. இதனால் காலை முதலே வயதானவர்கள் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள சிறப்பு முகாம்களுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

Advertisment