Advertisment

நக்கீரன் ஆசிரியர் முன்னிலையில் ‘விவசாயிகள் போராட்ட பூமியில் 25 நாட்கள்’ புத்தக வெளியீட்டு விழா!

விவசாயிகள் தங்கள் கோரிக்கைக்காக நான்கு வழி சாலைகளை மறியல் செய்து முற்றுகை போராட்டத்தை ஓராண்டுகள் நடத்திய வரலாறு உலகில் எங்குமே இல்லை. டெல்லியைச் சுற்றி நடைபெறும் இந்த போராட்டம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

Advertisment

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகத்தின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் குளிர் மரணங்கள் நிகழ்ந்த ஜனவரி மாதத்தில் 25 நாட்கள் ஒரு டெண்டில் தங்கியிருந்து அந்த அனுபவங்களை வாரம் இருமுறை வெளிவரும் நக்கீரன் இதழில் தொடர் கட்டுரை எழுதிவந்தார். அது ‘விவசாயிகள் போராட்ட பூமியில் 25 நாட்கள்’ என்னும் தலைப்பில் நக்கீரன் வெளியீட்டகம் பதிப்பித்துள்ளது. இந்த நூல் போராட்டம் நீண்ட காலம் தாக்குப்பிடித்து நிற்கும் திறனை எங்கிருந்து பெற்றது என்பதை ஆராய்வதுடன் கார்ப்பரேட் உலகமயப் பின்னணியில் நிகழும் அரசியல் முன்னெடுப்புகளை நுட்பமாக விவரிக்கிறது. அரசியலில் இந்த இளைஞர்கள் தெளிவு மிக்க செயல்பாடு புதிய நம்பிக்கையைத்தருவதாகக் கூறுகிறது.

Advertisment

ஆரம்பம் முதலே விவசாயிகளின் மீது பல்வேறு அவதூறுகள் பரப்பப்பட்டன. துரோகம், அடக்குமுறை, தாக்குதல் அமலாக்கத்துறையினரின் மிரட்டல் என்று எத்தனையோ குறுக்கு வழிகள் விவசாயிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டன. இவை அனைத்தையும் விவசாயிகள் எவ்வாறு முறியடித்துக் காட்டினார்கள் என்பதை நூல் ஆழமாக விவரிக்கிறது.

இன்று பிரதமரின் அறிவிப்பு போராட்டம் வெற்றி பெற்றதாக நம்மைப் புரிந்து கொள்ள வைத்துள்ளது. போராட்டக்காரர்களுக்குப் பிரதமர் வாக்குறுதியில் நம்பிக்கை இல்லை. ஆகவே தான் நாடாளுமன்ற கூட்டத் தொடரின் அறிவிப்புக்குப் பின் போராட்டத்தை நிறைவு செய்து கொள்வதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். இந்த பின்னணியில் நூல் வெளிவருகிறது.

இந்த நூலை இந்த கம்யூனிஸ்ட் கட்சியின் தியாகத் தலைவர் ஆர்.நல்ல கண்ணு வெளியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். நக்கீரன் ஆசிரியர் முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கே. பாலகிருஷ்ணன், ஓவியர் மருது, கவிஞர் யுகபாரதி, வட சென்னை மாவட்ட செயலாளர் எம்.எஸ். மூர்த்தி, தென் சென்னை எஸ். ஏழுமலை, வட சென்னை பா.கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

book launch cpm nallakannu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe