bo

Advertisment

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா வருகின்ற நவம்பர் 24 முதல் டிசம்பர் 3-ஆம் தேதி வரை புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் நடைபெறுகிறது. புத்தகத் திருவிழா குறித்த செய்தியினை கல்லூரி மாணவர்களிடம் கொண்டுசெல்லும் வகையில் இந்த இலக்கியப் போட்டிகள் நடைபெற்றது. இதில், கட்டுரை மற்றும் கவிதைக்கான முடிவுகள் பரிசீலனை செய்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

வினாடி-வினா போட்டியில் புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மாணவன் க.செல்வமுருகன் முதல் பரிசையும், அரசு கலை அறிவியல் மகளிர் கல்லூரி மாணவி சீ.அனுசியா இரண்டாம் இடத்தையும், திருக்கோகர்ணம் பாரதி வித்யாலயா கல்வியல் கல்லூரி மாணவன் சி.அஜீத்குமார் மூன்றாம் பரிசினையும் பெற்றனர். பேச்சுப்போட்டியில் அரசு மகளில் கலைக்கல்லூரி மாணவி ந.சரஸ்வதி முதல் பரிசையும், மன்னர் கல்லூரி மாணவி மெ.சிவநந்தினி இரண்டாம் பரிசினையும், மன்னர் கல்லூரி மாணவி செ.ஜோதி மூன்றாம் பரிசினையும் பெற்றனர்.

போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் புத்தகப் பரிசு வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகத் திருவிழாவில் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என விழாக் குழுவினரால் அறிவிக்கப்பட்டது. புத்தகத் திருவிழா வரவேற்புக்குழுத் தலைவர் தங்கம்மூர்த்தி, செயலாளர் அ.மணவாளன் மற்றும் நிர்வாகிகள் எஸ்.விஸ்வநாதன், மா.குமரேசன், மு.கருப்பையா, ஆர்.முத்துச்சாமி, எஸ்.சேதுராமன், ஆர்.ரவிச்சந்திரன், சி.அய்யாவு, பொன்.கருப்பையா, எஸ்.கணேசன், வே.முருகையன், சு.மதியழகன் உள்ளிட்டோர் பேட்டிகளை ஒருங்கிணைத்தனர்.