
அரசின் அனைத்துபொதுத்துறை ஊழியர்களுக்கும் 20% வரை போனஸ் வழங்கத்தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 20% வரை போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த நிறுவனங்களில் ஒதுக்கப்படும் உபரி தொகையைக் கணக்கில் கொண்டு 8.33 சதவீதம், மிகை ஊதியம் 11.67 சதவீதம் கருணைத்தொகை என போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிரந்தரத்தொழிலாளர்கள் குறைந்தபட்சம் 8,500 ரூபாயும், அதிகபட்சம் 16,800 ரூபாயும் பெறுவார்கள்.
தமிழ்நாடு அரசுப் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2.84 லட்சம் தொழிலாளர்களுக்கு 402.97 கோடி ரூபாய் போனஸாக தரப்பட உள்ளது. கூட்டுறவு அமைப்புகள் மற்றும் அது தொடர்பான நிறுவனங்களில் பணிபுரிவோருக்கான போனஸ் பற்றிய அறிவிப்பு தனித்தனியாக வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us