Advertisment

தீபாவளி போனஸ் -  முதல்வர் அறிவிப்பு

bonus

புதுச்சேரி அரசுத்துறைகளில் பணிபுரியும் அரசிதழ் பதிவுபெறாத B-பிரிவு அலுவலர்கள் மற்றும் அனைத்து C-பிரிவு ஊழியர்களுக்கு இந்த நிதியாண்டுக்கான போனஸ் வழங்குவதற்கான ஒப்புதலை அரசு வழங்கியுள்ளது.

Advertisment

அதற்கான அரசாணை நிதித்துறையின் மூலம் வெளியிடப்பட்டு, அரசு ஊழியர்களுக்கு போனஸ் உடனடியாக வழங்கப்படும்.

Advertisment

அதன்படி அரசுத்துறைகளில் பணிபுரியும் B-பிரிவு அலுவலர்கள் மற்றும் அனைத்து C-பிரிவு ஊழியர்களுக்கு போனஸ் தொகையாக அதிகபட்சமாக ரூ.6,908/- வழங்கப்படும். மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்களுக்கு போனஸ் தொகை அதிகபட்சமாக ரூ. 1,184/- வழங்கப்படும்.

இதற்காக புதுச்சேரி அரசுக்கு ரூபாய் 18 கோடி கூடுதலாகச் செலவாகும் என்றும், உற்பத்தி சார்ந்த அரசு நிறுவனங்களுக்கு வழங்கப்படவேண்டிய போனஸ் தொகை குறித்த அறிவிப்பு மத்திய அரசிடமிருந்து பெறப்பட்டவுடன் அறிவிக்கப்படும் எனவும் முதல்வர் நாராயணசாமி அலுவலக செய்தி அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

Announcement chief minister bonus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe