Advertisment

வெளிநாட்டு அமைப்பு பெயரில் வெடிகுண்டு மிரட்டல்; தனியார் பள்ளியில் பரபரப்பு

Bomb threats in the name of a foreign organization; Busy in a private school

Advertisment

நீலகிரி மாவட்டம் உதகையில் தனியார் பள்ளி ஒன்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அண்மையில் ஈரோட்டில் உள்ள பிரபல பள்ளி ஒன்றுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டநிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த மாணவனே பள்ளிக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்ற நோக்கில் பள்ளிக்கு போலியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தெரியவந்தது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தனியார் ஆங்கில ஆண்கள் பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் பள்ளி வளாகத்தில் சோதனை நடத்தினர். வெளிநாட்டு அமைப்பு ஒன்றின் பெயரில் இரண்டு முறை அந்த பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், இதுகுறித்து பெற்றோர்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் போலீசார் சோதனைக்குப் பிறகு தெரிவித்துள்ளனர். இதனால் இந்த பகுதியில் சென்று பரபரப்பு ஏற்பட்டது.

nilgiris police
இதையும் படியுங்கள்
Subscribe