Bomb threat to schools- Trichy stirs

Advertisment

சமீபமாகவே பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும்சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் திருச்சியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சியில் செயல்பட்டு வரும்இரண்டு பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக சென்னை தலைமை காவல் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் மின்னஞ்சல் அனுப்பி இருந்தனர். உடனடியாக திருச்சி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு திருச்சியில் செயல்படும் மகாத்மா காந்தி நூற்றாண்டு நினைவு பள்ளி மற்றும் ராஜாஜி வித்யாலயா பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளிலும் போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் ஆய்வில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பள்ளியில் இருந்த மாணவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.