தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு மர்ம நபர்கள் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். காவல்துறை கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்ட அவர்கள் முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு இருப்பதாக்க கூறியுள்ளனர். இந்த மிரட்டல் தொடர்பாக காவல்துறையினர் அவரது வீட்டை சோதனை செய்து வருகிறார்கள்.
தொடர்ந்து இதுமாதிரியான மிரட்டல்கள் அடிக்கடி முதல்வர் வீட்டிற்கு வருவது குறிப்பிடத்தகுந்த ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது. வதந்தி பரப்புவோர் உடனடியாகக் கைது செய்யப்பாடுவார்கள் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆய்வு நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.