airport

சென்னை விமான நிலையத்திற்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு வந்ததையடுத்து, விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

Advertisment

இதேபோல், திருச்சி, மதுரை விமான நிலையத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையடுத்து, திருச்சி, மதுரை விமான நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

Advertisment

இதனிடையே, மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த லால்குடி பூவலூரைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.