Advertisment

நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்...!!

ajith

Advertisment

சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்தின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், காவல்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டதில் அந்த வெடிகுண்டு மிரட்டல், வெறும் புரளி என்பது தெரியவந்துள்ளது.

காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இன்று மதியம் தொலைபேசியில் பேசியநபர், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கக்கூடிய அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டினார்.அதன்பிறகு இதுகுறித்துகாவல்துறை கட்டுப்பாட்டு அறையிலிருந்து நீலாங்கரை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், நீலாங்கரை போலீசார் மோப்ப நாயுடன் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்தின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.

இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யாரெனபோலீசார் விசாரணை நடத்தியதில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.அதேபோல் தற்போது வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் அடிக்கடிபிரபலங்களின் வீடுகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டி கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

Advertisment

அண்மையில் சில நாட்களுக்கு முன்பு இதேபோல் நடிகர் விஜய்யின் வீட்டிற்கும் இதேபோல் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது, அதுவும் புரளி என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

bomb threat police ajith
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe