Skip to main content

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Published on 15/09/2020 | Edited on 15/09/2020
 Bomb threat to Abirami Amman temple in Dindigul!

 

 

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் வெடி குண்டு இருப்பதாக வந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.

 

திண்டுக்கல் மாநகரின் மத்தியில் அமைந்துள்ளது அபிராமி அம்மன் மற்றும் பத்மகிரீஸ்வரர் கோவில். பிரசித்தி பெற்ற சிவன் கோவில் என்பதால் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவதுண்டு. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் திருமணங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள்  நடைபெறும்.

 

இந்நிலையில் நேற்று முகூர்த்த நாள் என்பதால் பலர் திருமணம் செய்து விட்டு சாமி தரிசனத்திற்காக நின்று கொண்டிருந்தனர். அப்போது கோவிலுக்குள் சக்தி வாய்ந்த வெடிகுண்டு இருப்பதாக மர்ம தொலைபேசி வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கோவில் ஊழியர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து கோவிலுக்கு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கிருந்து பக்தர்கள் மற்றும் ஊழியர்களை வெளியேற்றினர். பின்னர் கோவில் முழுவதும் அங்குலம் அங்குலமாக வெடிகுண்டு சோதனை நடத்தினர்.

 

 Bomb threat to Abirami Amman temple in Dindigul!

 

 

அதன்பின் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கோவில் முழுவதும்  சோதனை நடத்தப்பட்டது. மேலும் கோவில் வளாகத்தையும் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். அங்கிருந்த வியாபாரிகள் உடனடியாக கடையை அடைத்துவிட்டு சென்றனர். தொடர்ந்து சோதனை நடந்தது. அபிராமி அம்மன் கோவில் பகுதியில் கடந்த சில நாட்களாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்து வருகிறது. இதன் காரணமாகவே கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

 

அபிராமி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவம் திண்டுக்கல் மாநகர் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்